ஈரோடு அக், 26
ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கோடம்பள்ளம் அரசு உயர்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் ஆய்வு செய்த அவர்கள், அங்கு கட்டப்பட்டு உள்ள சமையலறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, ஈரோடு வட்டாச்சியர் பாலசுப்பிரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.