Month: September 2022

தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பம். மாவட்ட ஆட்சியர் தகவல்.

கன்னியாகுமரி செப், 14 நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் தேவாலயங்கள் சீரமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடங்களில்…

மணிமுக்தா அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி செப், 14 கள்ளக்குறிச்சி அருகே 36 அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் மணி மற்றும் முக்தா ஆகிய ஆறுகள் வழியாக பாயந்தோடும் தண்ணீர் இந்த அணைக்கு வரும். இதன் மூலம் 30…

இயக்குனர் சித்து திடீர் மரணம்.

சென்னை செப், 14 கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படம்…

நமது நகரம் நமது பொறுப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்.

காஞ்சிபுரம் செப், 14 தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் நமது நகரம் நமது பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நமது நகரம் நமது பொறுப்பு எனும்…

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கான சமையல் கூடத்தை ஆட்சியர் பார்வை.

ஈரோடு செப், 14 தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக நாளை காலை உணவு வழங்கப்பட…

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் செப், 14 திண்டுக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாலன், துணை செயலாளர் ராஜாங்கம், இந்திய…

பருப்புகளை பதுக்கினால் கடும் நடவடிக்கை. ஆட்சியர் விஷ்ணு எச்சரிக்கை.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பண்டிகை காலங்களில் பருப்புகளின் விலை உயர்வு மற்றும் பதுக்கல்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்றியமையாச்சட்டம் 1955-ன் கீழ் துவரம் பருப்பு,…

களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனராக ரமேஷ்வரன் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்தும், அவரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் களக்காட்டில் போஸ்டர்கள்…

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி செப், 14 மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா தலைமை தங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், அமைப்பின்…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யூனிட் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய இந்திய நிறுவனம்.

கடலூர் செப், 14 தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேரின் சிகிச்சைக்காக உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அனுகி மருந்துகளை வாங்கி தரும்படி கோரிக்கை…