சென்னை செப், 14
கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படம் மூலம் தமிழ் திரையுல்கில் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து மன்சூர் அலிகானை வைத்து ‘ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்’ என்கிற திரைப்படத்தை இயக்கினர். சில காரணங்களால் அப்படம் ரிலீசாகவில்லை. இதன் பின் அவர் பெரிய அளவில் படங்களை இயக்காவிட்டாலும், ரோஜா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களுக்கு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வந்தார். அந்த சீரியலில் நடிக்கவும் செய்துள்ளார்.
மேலும் இயக்குனர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து கடைமடை என்கிற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இயக்குனர் சித்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து இயக்குனர் சித்துவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பனை. இப்படத்தை இவரது உடன்பிறந்த சகோதரர் பொன். ஆதி ஆறுமுகம் தான் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், சித்து மரணமடைந்திருப்பது அப்படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.