தர்மபுரி செப், 14
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா தலைமை தங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் லெனின்மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
மேலும் மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும். நடப்பு ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அளிக்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை வழங்கவேண்டும். 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை வழங்கவேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.