தர்மபுரி செப், 13
தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜம்ப்ரோப் சங்கம் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜம்ப்ரோப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளை உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் நடத்தினர். 6 முதல் 19 வயது வரையில் மாணவர்களுக்கு 6 பிரிவுகளிலும், மாணவிகளுக்கு 4 பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தக. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.