தர்மபுரி செப், 12
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று
நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்றினால் தாய், தந்தை இருவரையும் இழந்த 9 குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம்
10 மாதங்களுக்கு ரூ.2.70 இலட்சம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று வழங்கினார்கள். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.