நெல்லை செப், 14
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பண்டிகை காலங்களில் பருப்புகளின் விலை உயர்வு மற்றும் பதுக்கல்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்றியமையாச்சட்டம் 1955-ன் கீழ் துவரம் பருப்பு, கடலைபருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிபருப்பு உள்ளிட்ட பருப்புகளின் இருப்பு அளவை கண்காணிக்கும் விதத்தில் அரவை முகவர்கள், வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் தங்களின் இருப்பு விவரங்களை https://fcainfoweb.nic.in/psp என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் துவரம், கடலைப்பருப்பு, உளுந்து, பாசி பருப்பு ஆகிய பருப்பு வகைகளை பதுக்கும் நோக்கத்தில் எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரவை முகவர்கள், பெருவணிகர்கள், ஏற்றுமதியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பருப்பு வகைகளின் இருப்பு விவரங்களை https://fcainfoweb.nic.in/psp என்ற இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.