Month: August 2022

பூங்காவில், சுப்பிரமணிய சிவாவுக்கு சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் ஆலோசனை.

திண்டுக்கல் ஆக, 30 வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் பேசும்போது, வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில்…

என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்.

கடலூர் ஆக, 30 கடலூர் மந்தாரக்குப்பம், நெய்வேலியில் சுரங்க அனல்மின் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் கரிவெட்டி, மும்முடி சோழகன்,…

ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை.

தர்மபுரி ஆக, 30 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 1¾ டன் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.715க்கும், குறைந்தபட்சமாக…

மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

செங்கல்பட்டு ஆக, 30 இந்திய தேர்தல் ஆணையர் அனுப்சந்திர பாண்டே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆகியோர் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக விடுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும்…

குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

அரியலூர் ஆக, 30 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்1 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வருகிற 2 ம்தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து…

சீன நிறுவன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை.

புதுடெல்லி ஆக, 30 மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ‘ரூ.12 ஆயிரத்துக்கும் குறைவான சீன நிறுவன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவல்…

கனடாவில் இசையமைப்பாளர் ‘ஏ.ஆர். ரகுமான்’ பெயர் சூட்டி பெருமை.

கனடா ஆக, 29 கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ‘ஏ.ஆர். ரகுமான்’ பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் பெயரைச் சூட்டியதற்கு ஏ.ஆர். ரகுமான் நன்றி தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான்…

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகை திட்டம். செப்டம்பர் 5ம் தேதி துவக்கம்

சென்னை ஆக, 29 தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும்,…

100 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு உதவித்தொகை உயர்வு. புதுவை முதல்வர் அறிவிப்பு.

புதுச்சேரி ஆக, 30 புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் 90 வயது முதல் 100 வயதுக்குள்…

கேரளாவில் நிலச்சரிவு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.

கேரளா ஆக, 30 அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், கடந்த சில நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில், நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு…