சென்னை ஆக, 29
தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உதவித் தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணிக்கையை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.