Category: வேலூர்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்.

வேலூர் அக், 13 வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி…

போதை பொருள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

வேலூர் அக், 11 வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர்…

ஜெயிலில் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வேலூர் அக், 5 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் தன் மீது உள்ள…

வேலூரில் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

வேலூர் அக், 5 தமிழக விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார், அமைப்பாளர்…

காந்தி ஜெயந்தியன்று மது, சாராயம் விற்றவர்கள் கைது.

வேலூர் அக், 4 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு…

குடித்துவிட்டு ஆட்டோக்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை. காவல்துறையினர் எச்சரிக்கை.

வேலூர் அக், 3 வேலூர் மாநகராட்சி பகுதியில் 58 இடங்களில் ஆட்டோ ஸ்டேண்ட் உள்ளன. சுமார் 3 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சில ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை கட்டணம் அதிகம்…

மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு

.வேலூர் அக், 2 தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கக்கல்வி, இடைநிலைக்கல்வி, தனியார் பள்ளிக்கல்வி என 3 பிரிவாக மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்தி தனித்தனி அலுவலகங்கள் அக்டோபர் 1 ம்தேதி முதல் செயல்படும் என அரசு அறிவித்தது.அதன் அடிப்படையில் வேலூர்…

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட விளக்கக் கூட்டம்.

வேலூர் அக், 1 கே.வி.குப்பம் ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய உதவி வேளாண்மை அலுவலர் வினித், தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள்…

கெங்கநல்லூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகமில் நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 30 அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு வட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்…

தமிழக- ஆந்திர எல்லையில் போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை சோதனை.

வேலூர் செப், 30 ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தடுப்பு நடவடிக்கையில்…