வேலூர் செப், 30
ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. பேருந்துகள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதை தடுக்க போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி தலைமையில் தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் கார்கள், பேருந்துகள், லாரிகள், வேன்கள் ஆகிய வாகனங்களில் போதை பொருள் ஏதாவது கருத்தப்படுகிறதா என சோதனை செய்தனர். அதேபோல காட்பாடி வழியாக செல்லும் ரயில்களிலும் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.