Category: வேலூர்

ரூ.35 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடக்கம்.

வேலூர் செப், 29 திருவலம், பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.35 கோடி மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். காட்பாடி தாலுகா பொன்னையில் நிரந்தர வெள்ள நிவாரண பணி 2021-22 கீழ் சித்தூர்- திருத்தணி…

வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வட்டாட்சியர் ஆய்வு.

வேலூர் செப், 28 அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட திப்ப சமுத்திரம் ஊராட்சி குச்சிபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பலமுறை வருவாய்த்துறை…

கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்.

வேலூர் செப், 26 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தமிழக கல்வி கொள்கை குறித்து தமிழகத்தில 4 மண்டலங்களாக பிரித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய…

ஊசூர் வட்டாரத்தில் பனைவிதை நடும் விழா.

வேலூர் செப், 25 அடுக்கம்பாறை வேலூர் மாவட்டத்தில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பனை விதைகள் நட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் பனைவிதை நடும் முகாமில், 100 நாள்…

வேலூர் கோட்டையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு.

வேலூர் செப், 24 கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பொது இடங்களில் மர்மநபர்கள் நடமாட்டம்…

சேர்க்காடு சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன தணிக்கை.

வேலூர் செப், 23 தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்…

பள்ளிகொண்டாவில் உள்ள மாணவர் விடுதியில் வட்டாட்சியர் ஆய்வு

வேலூர் செப், 22 அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், சமையல் கூடம் உள்ளிட்டவைகளை…

ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ்.

வேலூர் செப், 20 இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1 ம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவம்…

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கோரிக்கை மாநாடு.

வேலூர் செப், 19 வடுகந்தாங்கலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வட்ட தலைவர் கே.சண்முகம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ரவி கலந்து கொண்டு…

பயிற்சி முடித்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலூர் செப், 18 மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு வட்டாரங்களைச் சேர்ந்த 35 அங்கன்வாடி பணியாளர்களுக்கு துறை சார்ந்த பணி பயிற்சி குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒரு மாதம் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த…