வேலூர் அக், 11
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணை ஆய்வாளர் மோகனம் தலைமையில் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.