வேலூர் அக், 5
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தில் முருகன் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் தன் மீது உள்ள வழக்கு ஒன்றை விரைந்து முடிக்க கோரி முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் முருகனின் உடல்நிலை மோசமாகி உள்ளது. நேற்று ஜெயிலில் இருந்த முருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து அவரை ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகனுக்கு 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து முருகன் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.