Category: விழுப்புரம்

விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.

விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…

பொன்முடி சகோதரர் காலமானார்.

விழுப்புரம் ஜன, 17 உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுகவினர் அரசியல் பிரபலங்கள் பலரும்…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

விழுப்புரம் ஜன, 16 சேமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5…

ஒப்பந்த செவிலியர்கள் அஞ்சல் அனுப்பும் போராட்டம்.

விழுப்புரம் ஜன, 10 விழுப்புரம் பணி நிரந்தரம் தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு பிறப்பித்த…

கண்டமங்கலத்தில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 8 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2…

பொங்கல் டோக்கன் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் ஜன, 6 விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15 ம்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை…

கள்ளக்குறிச்சியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 4 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் குமார், கட்டுமான…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம்.

விழுப்புரம் ஜன, 2 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற…

கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் டிச, 31 தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு…

விழுப்புரம் மாவட்டத்தில் 1,020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவி.

விழுப்புரம் டிச, 30 விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட…