விழுப்புரம் ஜன, 6
விழுப்புரம் நகராட்சிக்கு ட்பட்ட தனலட்சுமி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் 15 ம்தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ.1000, 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, 1 முழு நீள கரும்பினை வழங்கிட ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன் அங்கு சென்று டோக்கன் பணியை ஆய்வு செய்தார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் யசோதா தேவி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகா ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.