விழுப்புரம் ஜன, 2
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.
இதில் ஆட்டோ டிரைவர்கள், வாகன உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விபத்தில்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவிதேஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.