Category: ராமநாதபுரம்

அல் மஸ்ஜிதுர் ரய்யான் பஜார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கீழக்கரை மே, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள இம்பாலா காம்ப்ளக்ஸில் அமைந்திருக்கும் இம்பாலா M.H. செய்யது சுல்தான் இப்ராஹீம் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் அல்மஸ்ஜிதுர் ரய்யான் A/C பஜார் பள்ளியில் 10. 5. 2024…

பத்தாம் வகுப்பு தேர்வில் கீழக்கரை மாணவி அபார சாதனை!

கீழக்கரை மே, 11 நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கீழக்கரை மாணவிகளிடையே குதூகலத்தை உண்டாக்கியது. கீழக்கரை மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள்…

கீழக்கரை நகர் பேருந்து விபத்து!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர் பேரூந்து(TN.63 N.1326) திருப்புல்லாணி காவல்நிலைய குறுகிய சாலை வழியாக வந்த போது எதிரில் வந்த டிராக்டர் செல்ல ஒதுங்கிய போது பள்ளத்தில் கவிழ்ந்து…

கீழக்கரையில் இரண்டு ரவுடிகள் மீது குண்டாஸ்!

கீழக்கரை மே, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சீனி முகம்மது மகன் முகம்மது கான்(வயது 32) மற்றும் புதுகிழக்குத்தெரு ஜாஹிர் உசேன் மகன் சதாம் உசேன்(வயது 34) இருவரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி வழிபறி செய்து வந்தனர். இதனால்…

3500 ரூபாய் லஞ்சம்: கையோடு சிக்கிய பொறியாளர்!

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச்செல்விக்கு என்மனம்கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலத்திற்கு பட்டா உட்பிரிவு…

கீழக்கரை மெயின் வீதிகளில் டாஸ்மாக் காலி பாட்டில்கள்!

கீழக்கரை மே, 7 மதுக்கடை உள்ள ஊர்களில் கூட குடித்த பாட்டில்களை மறைத்து போடும் போது மதுக்கடை இல்லாத கீழக்கரையில் முக்கிய வீதிகளிலெல்லாம் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாய் கிடக்கின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போல மதுபாட்டில்களும்…

+2 தேர்வில் கீழக்கரை மாணவிகள் அபார சாதனை!

கீழக்கரை மே, 6 இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100க்கு/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 142 மாணவிகள் தேர்வு எழுதி…

கீழக்கரையில் புதிதாக ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீரோடை!

கீழக்கரை மே, 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைதெருவில் அமைந்துள்ள ஓடக்கரை பள்ளிவாசலின் முக்கிய வீதியில் கழிவு நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீப காலமாக இது தொடர் கதையாகி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.…

மீனவர்களுக்கு தீடீர் எச்சரிக்கை அறிவிப்பு.

ராமநாதபுரம் ஏப்ரல், 5 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடலில் 45-65 கீமீ வேகத்துடன் காற்று வீசும் கடல் கொந்தளிப்பால் 1.5 உயரத்திற்கு அலை எழக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள்…

கல்வி கடன் ரத்து அறிவிப்பும், தனியார் நிறுவனம் மூலம் மிரட்டலும்!

கீழக்கரை மே, 5 தமிழ்நாட்டில் எந்த தேர்தல் வந்தாலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகி போனது மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து என்னும் அறிவிப்பு. தேர்தல் முடிந்ததும் காற்றில் பறக்க விடப்படும் பல்வேறு வாக்குறுதிகளில் கல்வி கடன் ரத்து…