ராமநாதபுரம் ஏப்ரல், 5
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் நலத்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடலில் 45-65 கீமீ வேகத்துடன் காற்று வீசும் கடல் கொந்தளிப்பால் 1.5 உயரத்திற்கு அலை எழக்கூடும். இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கடலில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம். காற்று வேகத்தால் படகுகள் சேதம் அடைய கூடும் என்பதால் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.