ராமநாதபுரம் மே, 7
ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச்செல்விக்கு என்மனம்கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மூலமாக மனுச்செயதுள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார். இந்நிலையில் மேற்படி நிலத்தை அளவீடு செய்து அதன் அறிக்கையை நில அளவீட்டாளர் அளந்து கணினி மூலம் பதிவேற்றம் செய்ய சம்பந்தபட்ட பகுதி நில அளவையர் சிவா என்பவரை சந்தித்து முறையிட்டுள்ளார்.
அப்போது மேற்படி நபர் நிலத்தை அளவீடு செய்தபோது திருநாவுக்கரசரிடன் இது தொடர்பாக கணினியில் பதிவேற்றம் செய்யவும் பட்டா உட்பிரிவு செய்யவும் நிறைய செலவாகும். மேல் அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டும் அதற்கு ரூ.3,500/- என்னிடம் கொடுத்தால் மேற்படி வேலையை “விரைந்து” முடிப்பேன் என்றும் மேற்படி பணத்தை இன்று மாலை 5மணிக்கு மேல் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக இ-சேவை மையம் அருகே வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
காவல் துறையில்
புகார் செய்தார்.
அதை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய ரூ.3,500 ஐ கொடுத்து மேற்படி இடத்தில் மாறுவேடத்தில் அங்காங்கே மறைந்திருந்தனர்.
அப்போது நில அளவையர் சிவா ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
சமீப காலமாக ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இந்தியன் திரைப்படத்தில் வருவதை போன்று அதிரடி ஆக்ஷனாக இருக்கிறதென்று பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
லஞ்சம்,ஊழலுக்கு எதிரான காவல்துறைக்கு நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் ஒரு ராயல் சல்யூட்டை சமர்ப்பிக்கின்றோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்