கீழக்கரை மே, 8
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த சீனி முகம்மது மகன் முகம்மது கான்(வயது 32) மற்றும் புதுகிழக்குத்தெரு ஜாஹிர் உசேன் மகன் சதாம் உசேன்(வயது 34) இருவரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி வழிபறி செய்து வந்தனர்.
இதனால் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதனையடுத்து இரண்டு ரவுடிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்