கீழக்கரை மே, 9
ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகர் பேரூந்து(TN.63 N.1326) திருப்புல்லாணி காவல்நிலைய குறுகிய சாலை வழியாக வந்த போது எதிரில் வந்த டிராக்டர் செல்ல ஒதுங்கிய போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவம் நடந்த உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் காயமடைந்த பயணிகளை ஆம்புலன்ஸ் மூலமாகவும் மற்ற வாகனங்கள் மூலமாகவும் மேல் சிகிச்சைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.
மேலும் இதில் பயணித்த ஆண்கள் பெண்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பயணிகள் வைத்திருந்த பழங்கள்,காய்கறிகள் பஸ் முழுவதும் சிதறி கிடந்தது பார்ப்போர் கண்களை குளமாக்கின.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்