Category: தர்மபுரி

ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை.

தர்மபுரி ஆக, 30 பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சுமார் 1¾ டன் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.715க்கும், குறைந்தபட்சமாக…

ஊராட்சிகளில் சுகாதார பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தர்மபுரி ஆக, 29 காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சுகாதார பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயா, ஒன்றிய கவுன்சிலர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.

தர்மபுரி ஆக, 28 கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியது. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர்…

உத்தனூரில் ரூ.16.85 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம்.

தர்மபுரி‌ ஆக, 28 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூர் கிராமத்தில் ரூ.16.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர்…

சரக அளவிலான விளையாட்டு போட்டி.

தர்மபுரி ஆக, 27 சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கைப்பந்து, கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை…

அதிமுக கொடி ஏற்று விழா.

தர்மபுரி ஆகஸ்ட், 25 அதிமுக. 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி அரூர் பழையபேட்டையில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார்…

காட்டம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடந்தது.

தர்மபுரி ஆகஸ்ட், 22 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்…

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.

தர்மபுரி ஆகஸ்ட், 19 அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்படி நேற்று நடைபெற்றது. தர்மபுரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழுவினர்,…

நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி.

தர்மபுரி ஆகஸ்ட், 18 தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கினார். அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மெயின்…

புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு சீல்.

தர்மபுரி ஆகஸ்ட், 17 தர்மபுரி மாவட்டத்தில், வெள்ளோலை பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே நகுலன் என்பவர் மளிகை கடை நடத்தி வந்தார். அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மதிகோன்பாளையம் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல்…