தர்மபுரி ஆகஸ்ட், 19
அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்படி நேற்று நடைபெற்றது. தர்மபுரியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழுவினர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து தர்மபுரி மயானத்தில் ஒரே இடத்தில் பெரிதாக வெட்டப்பட்ட குழியில் 9 பேரின் உடல்களை அடக்கம் செய்தனர்.
அப்போது நகர காவல் ஆய்வாளர் நவாஸ், 9 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பால் ஊற்றி, தேங்காய் உடைத்து, கற்பூரம் மற்றும் ஊதுபத்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.