தர்மபுரி ஆகஸ்ட், 22
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டம்பட்டி கிராமத்தில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகன் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு சங்க தலைவர் மோகன், நிர்வாகி ஜிம்முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, கிளை செயலாளர்கள் மூக்கப்பன், சாமிநாதன், சுரேஷ், மணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.