தர்மபுரி ஆக, 28
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி உத்தனூர் கிராமத்தில் ரூ.16.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை தாங்கி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
பின்னர் அவர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் அஞ்சலி வேணு, தலைமை ஆசிரியர் துளசியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், ஒப்பந்ததாரர் வேலு, கட்சி நிர்வாகிகள் முனுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.