Category: செங்கல்பட்டு

புதிதாக 2 நீதிமன்றங்கள் திறப்பு. உயர் நீதிமன்ற நீதிபதி தொடக்கம்.

செங்கல்பட்டு நவ, 22 செங்கல்பட்டு வருவாய் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் வருவாய் மாவட்டம் இணைந்து திருப்போரூர் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்றம்…

கிராமப்புற பெண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை.

செங்கல்பட்டு நவ, 21 மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் உள்ள முருகப்பா செட்டியார் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நவீன் தலைமையில் கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில்…

கல்பாக்கம் புதிய பாவினி அணுமின் நிலையத்திற்கு இயக்குனர் நியமனம்.

செங்கல்பட்டு நவ, 19 கல்பாக்கத்தில் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அணுமின் நிலையம் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து “பாவினி” என்ற பெயரில் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்து மின் உற்பத்தி செய்ய…

புதிய டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டை துவக்கி வைத்த திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி.

செங்கல்பட்டு நவ, 17 மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கிலமேடு கிராமம், கல்பாக்கம் அணுமின் நிலைய முக்கிய அதிகாரிகளின் நுழைவு வாயில் பகுதியில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்வெட்டு நிலவி வந்தது.…

மழை நீர் தேங்காமல் இருக்க கால்வாய் அடைப்புகள் சீரமைப்பு.

வண்டலூர் நவ, 15 செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டு மகாலட்சுமி நகர் பகுதியில்…

திருக்கழுகுன்றத்தில் நவீன எரிவாயு தகனமேடை. பேரூராட்சி உதவி இயக்குனர் நேரில் ஆய்வு.

செங்கல்பட்டு நவ,13 திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இறப்பவர்களை பழங்காலத்து முறையில் விறகுளால் எரியூட்டப்பட்டு, தகனம் செய்வதால் கால தாமதமும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக திருக்கழுகுன்றத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை அமைத்து தரும்படி அரசின்…

அனகாபுத்தூரில் திரையரங்கத்தில் பாப்கான் திருடிய வாலிபர்கள்.

செங்கல்பட்டு நவ, 8 அனகாபுத்தூரில் பிரபல தியேட்டர் உள்ளது. பட இடைவேளையின் போது திரையரங்கத்தில் உள்ள கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 வாலிபர்கள் ‘பாப்கான்’ டப்பாவை திருடி சென்று விட்டனர். இந்த வீடியோ காட்சியை தியேட்டர் நிர்வாகம் சமூக வலைதளத்தில்…

சித்தாமூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

செங்கல்பட்டு நவ, 5 கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்,…

மழை காலங்களில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி.

செங்கல்பட்டு நவ, 4 புயல், பலத்த மழை போன்ற பேரிடர் காலங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கி தவிப்பது வழக்கம். அதேபோல் குளம், ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பின் போது…

மாமல்லபுரத்தில் கனமழை பாதுகாப்பு நடவடிக்கை.

செங்கல்பட்டு நவ, 3 தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் காவல் தலைமை இயக்குனர் ரவி கிழக்கு கடற்கரை சாலை கடலோர பகுதி மாவட்டங்களில் கனமழை பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு…