Category: செங்கல்பட்டு

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு.

செங்கல்பட்டு அக், 31 சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் ராஜேந்திர சிங் தலைமையில் குழுவினரும், கமாண்டன்ட் அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினரும் நேற்று…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டு கழுதை உயிரிழப்பு.

செங்கல்பட்டு அக், 29 சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 வயதான ஏஞ்சல் என்ற பெண் ஆசிய காட்டு கழுதை…

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு அக், 27 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 250 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 60 படகில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில்…

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடலரிப்பு.

செங்கல்பட்டு அக், 25 மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடற்கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள், சமுதாயக்கூடம், படகுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு தூண்டில் வளைவு…

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

செங்கல்பட்டு அக், 24 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தீபாவளி…

தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி.

செங்கல்பட்டு அக், 22 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள செல்வகம் சந்தானலட்சுமி நோபல் தனியார் பள்ளியில் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விழிப்புணர்வு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை…

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்.

செங்கல்பட்டு அக், 21 நடிகர் சூர்யாவின் பண்ணை வீடு மற்றும் ஸ்டூடியோ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ளது. அண்மையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற வள்ளி எட்டியப்பன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில்…

மாமல்லபுரத்தில் மத்திய கலாசாரத்துறை அதிகாரி ஆய்வு.

செங்கல்பட்டு அக், 20 செஸ் ஒலிம்பியாட் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ம்தேதி முதல் ஆகஸ்டு 9 ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது. இந்த செஸ் போட்டியின் நினைவாக வடக்கு மாமல்லபுரம் பகுதியில்…

நாடு முழுவதும் 600 இடங்களில் பிரதமரின் விவசாயிகள் செழுமை மையம் தொடக்கம்.

செங்கல்பட்டு அக், 19 திருக்கழுக்குன்றம் சட்ராஸ் ரோடு பகுதியில் உள்ள மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் சார்பில் பிரதமரின் விவசாயிகள் சேவை மையம் ஸ்ரீபிருந்தா அக்ரோ சர்வீஸ் மையத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இவ்விழாவில் மதராஸ் பெர்ட்டிலைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாக…

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு.

செங்கல்பட்டு அக், 17 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டது. இதனை வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் முன்னிலையில்…