ஜூலை, 28
ஆகஸ்ட் 1 முதல் Gpay, Phonepe, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸை பார்க்க முடியும். சர்வர் பாதிப்பை தடுக்க இந்த நடைமுறை அமலாகிறது. மேலும், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கு பிறகும் அக்கவுண்ட்டில் இருக்கும் தொகை பயனர்களுக்கு தெரிவிக்கப்படும். அதேநேரத்தில், ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை.