சென்னை ஆக:6
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று 6.8.2025 சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார்.
இதன்போது மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் SDPI கட்சியின் மாநில தலைவருடன் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீத், அச.உமர் பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் மொய்தீன், ஏ.கே. அப்துல் கரீம், தலைமை நிலைய செயலாளர் முஹம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்