சென்னை ஜூலை, 28
7 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடு திரும்பினார். இதனிடையே, அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருப்பதாக கூறிவரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனியாருக்கு சென்றது ஏன் என தமிழிசை உள்ளிட்டோர் சாடினர். இந்நிலையில், உயர் பொறுப்புகளில் இருப்போர் அரசு மருத்துவமனைக்கு சென்றால் அவர்களுக்கான பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதாலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக மா.சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.