Spread the love

செங்கல்பட்டு அக், 20

செஸ் ஒலிம்பியாட் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ம்தேதி முதல் ஆகஸ்டு 9 ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்தது. இந்த செஸ் போட்டியின் நினைவாக வடக்கு மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள சோழி பொய்கை குளத்தை நடைபாதைகள், மரங்கள், செடிகள் அமைத்து அழகுபடுத்தி சீரமைக்க ரூ.95 லட்சமும், பூஞ்சேரியில் உள்ள வண்ணான் குளத்தை தூர் வாரி அழகிய செடி, கொடிகள் அமைத்து சீரமைக்க ரூ.16 லட்சம் என 2 குளங்களையும் சீரமைக்க மொத்தம் ரூ.1 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மேலும் சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் மத்திய கலாசாரத்துறை இயக்குனர் என்.டி.பட்லி தலைமையில் புதுடெல்லியில் இருந்து வந்திருந்த மத்திய கலாசாரத்துறை அலுவலர்கள் 2 குளங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் பேரூராட்சி பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *