செங்கல்பட்டு நவ, 21
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடியில் உள்ள முருகப்பா செட்டியார் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நவீன் தலைமையில் கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கடம்பாடி, வடகடம்பாடி, பெருமாளேரி, காரணை, மணமை, குன்னத்தூர், வளவந்தாங்கல், சதுரங்க பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை செய்து கொண்டனர். மார்பகம், வாய், தோல், கர்பப்பை, போன்ற பகுதிகளில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் அறிகுறிகளை அறிதல், வரும்முன் தடுத்துதல், ஆரம்பத்திலேயே மருத்துவம் பார்த்து சிகிச்சை செய்து குணமடைதல் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் சேஷாத்ரி, அலுவலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.