செங்கல்பட்டு நவ, 5
கூவத்தூர் அடுத்த சித்தாமூர் ஒன்றியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்யூர் சட்ட மன்ற உறுப்பினர் பனையூர் பாபு தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், சித்தாமூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் நிகழ்ச்சியில் மொத்தம் 250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அவர்களுக்கு சீதன பொருட்கள், பேறுகால நிதி உதவி, சத்துணவு பெட்டகங்கள் உள்ளிட்ட அரசு வழங்கும் நல உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அரசு திட்டத்திற்கு நன்றி கூறி மகிழ்ச்சியுடன் சென்றனர்.