Category: பொது

“தமிழன்” வீரமரணம்.

சேலம் ஏப்ரல், 13 பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர்.…

திமுகவை தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே.

சென்னை ஏப்ரல், 13 பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என செல்லூர் ராஜா போட்டு உடைத்துள்ளார். நேர்காணலில் அவர், பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான்.…

71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கும் மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 13 71 ஆயிரம் பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு உரிய அரசு வேலை வழங்கும் வகையில் ரோஸர் மேளா எனும் திட்டம் தொடங்கப்பட்டு…

கீழக்கரையில் மதநல்லிணக்க இஃப்தார்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி,…

ராஜஸ்தானை வீழ்த்துமா சென்னை?

சென்னை ஏப்ரல், 12 நடப்பு ஐபிஎல் தொடரின் 17 வது போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இரண்டு அணிகளுமே தலா மூன்று போட்டிகளை சந்தித்தது. அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில்…

ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்.

தஞ்சாவூர் ஏப்ரல், 12 தஞ்சாவூர் மாவட்டம் மேல்வேளி கிராமத்தில் மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இளங்கோவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த…

ரூ. 10 லட்சம் பரிசு மு.க.ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 12 ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர்,…

கொரோனாவால் ஒருவர் மரணம்.

காஞ்சிபுரம் ஏப்ரல், 12 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் 87 வயது முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இது 386 ஆக இருந்த நிலையில்,…

9000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை.

புதுடெல்லி ஏப்ரல், 12 ரயில்வே பாதுகாப்பு படையில் 9000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மை இல்லை என RPF விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பும் பணி…

மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

ராமநாதபுரம் ஏப்ரல், 12 ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வான நான்கு மாணவ மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று…