புதுடெல்லி ஏப்ரல், 12
ரயில்வே பாதுகாப்பு படையில் 9000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மை இல்லை என RPF விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அதில் 50 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவலில் உண்மை இல்லை என RPF அறிவித்துள்ளது.