கீழக்கரை ஏப்ரல், 13
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நகர்மன்ற உறுப்பினர்கள் மீரான் அலி, சித்திக், காயத்ரி, தாஜுன் அலிமா, ஐனுல் ஆரிபா, திமுக பிரமுகர் இஃப்திகார், நகர்மன்ற ஓவர்சீயர் சாம்பசிவம் மற்றும் திமுக, காங்கிரஸ், SDPI கட்சி, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்டுமான பொருட்கள் விற்பனையாளர் சங்க நிர்வாகிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியினை கூட்டமைப்பு தலைவர் கெஜி(எ)கஜேந்திரன், துணை தலைவர் தில்லை ரஹ்மான் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாய் ஜொலித்த இஃப்தார் நிகழ்வினை அனைவரும் பாராட்டினர்.
ஜஹாங்கீர்./தாலுகா நிருபர்.
கீழக்கரை.