சேலம் ஏப்ரல், 13
பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர். கூலித் தொழிலாளி ரவியின் மகனான கமலேஷின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.