Category: மாவட்ட செய்திகள்

மாரண்டஅள்ளி அருகே கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்.

தர்மபுரி அக், 25 மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் கிராமத்தில் கால்நடைகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு திமுக. மாவட்ட கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு அணி துணை…

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் அக், 25 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ரூ.19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில்…

கஞ்சா விற்ற பள்ளி மாணவன் கைது.

விழுப்புரம் அக், 25 விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கியபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் பிடிபட்ட நபரை சோதனை…

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை.

விருதுநகர் அக், 25 ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 1,243 பேருக்கு சட்ட மன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் சீருடை வழங்கினார். இதில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.

சென்னை அக், 25 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை. நேற்று 23ந் தேதி மட்டும் சென்னையில் 51 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 50 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 52…

குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன் தாரா ஜோடிகள்.

சென்னை அக், 25 நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9 ம்தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு…

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்.

தூத்துக்குடி அக், 25 இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.சூரிய கிரகணத்தால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. முருகப் பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம்…

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

கள்ளக்குறிச்சி அக், 24 திருக்கோவிலூர் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சந்தைப்பேட்டையில் உள்ள விஜயலட்சுமி நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர்…

கழிவுநீர் தொட்டியில் இறங்கி தனிநபர் சுத்தம் செய்யதால் கடும் நடவடிக்கை. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் அக், 24 காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

சோலார் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்.

ஈரோடு அக், 24 ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோலாரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி,…