சென்னை அக், 25
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை. நேற்று 23ந் தேதி மட்டும் சென்னையில் 51 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 50 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 52 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், மதுரையில் 55 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 48 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.
கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இந்த ஆண்டு இதனை மிஞ்சும் வகையில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.