விழுப்புரம் அக், 25
விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கியபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
மேலும் பிடிபட்ட நபரை சோதனை செய்ததில் 7 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த கீர்த்தி (22) என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பள்ளி மாணவனை காவல் துறையினர் கைது செய்து அவனிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.