விழுப்புரம் அக், 22
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், நிலைய அலுவலர் வேல்முருகன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு நிலைய அலுவலர் ராஜவேல், முன்னணி தீயணைப்பாளர் ஷாஜகான் உள்ளிட்ட தீயணைப்புத்துறையினரும் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளும் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.