கள்ளக்குறிச்சி அக், 24
திருக்கோவிலூர் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சந்தைப்பேட்டையில் உள்ள விஜயலட்சுமி நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் முருகன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கீதா வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியை தூய்மையாக வைத்து கொள்வது என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் சக்திவேல், கோவிந்த், கலையரசிதங்கராஜ், புவனேஸ்வரிராஜா, ஜெயந்திமுருகன், உஷாவெங்கடேசன், ஷபி, அருள், சரளாபாண்டியன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.