தூத்துக்குடி அக், 25
இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
சூரிய கிரகணத்தால் மாலை 4 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. முருகப் பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தொடங்குகிறது.
மேலும் இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் அன்புமணி மற்றும் மாவட்ட நிர்வாகமும், கோவில் பணியாளர்களும் செய்துள்ளனர்.