திருச்செந்தூர் அக், 21
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25 ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருகில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் பலர் உள்ளனர்.