மீன்கள் விலை இன்று(மே 4) உயர்ந்துள்ளது. சென்னை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய மீன் மார்க்கெட்டுகளிலும் கணிசமாக விலை அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களில் முக்கிய மீன் மார்க்கெட்டான தூத்துக்குடியில் கடந்த வாரம் 1 கிலோ ₹1300க்கு விற்பனையான சீலா ₹1600க்கும், விளை, ஊளி, பாறை மீன்கள் தலா ₹700க்கும், நண்டு ₹800, நகரை மீன் ₹500, சூரை மீன் ₹250, வங்கனை மீன் ஒரு கூடை ₹1750க்கும் விற்பனையாகிறது.