தூத்துக்குடி ஜூலை, 6
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.