காஞ்சிபுரம் அக், 24
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில்,
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் பழுது பார்க்கவும் இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய விதிகளுக்கு முரணாக தனிநபரை நியமிப்பது சட்ட விரோதமானதும், தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.
மேலும் உத்தரவை மீறி சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தான் பொறுப்பாளர்கள். கழிவுநீர் தொட்டி கழிவுநீர் குழாயில் எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். மனிதர்கள் மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பை அகற்றுவது மற்றும் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணான 1800 425 2801 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.