காஞ்சிபுரம் அக், 22
திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் 36வது மாநில இளையோர் தடகள போட்டி கடந்த 16 ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த தடகள போட்டியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில் வட்டெறிதலில் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படிக்கும் மாணவர் மகேஸ்வர் 47.30 மீட்டர் தூரம் வட்டெறிதல் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர் மகேஸ்வருக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சான்றிதழும் பதக்கமும் வழங்கினார்.