காஞ்சிபுரம் பிப், 21
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ராயப்பன் திடீரென விலகி உள்ளார். சாதி பார்த்து போடும் ஓட்டு எனக்கு தீட்டு என பொதுவெளியில் பேசிவிட்டு, தனது சொந்த சாதியே பெரிது என நினைப்பவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக சீமான் மீது குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.